ரத்ததான முகாம்
கல்லாமொழியில் ரத்ததான முகாம் நடந்தது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல்மின்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள துறைமுக வளாகத்தில் தனியார்நிறுவனம், திருச்செந்தூர் அரசுமருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. முகாமிற்கு தமிழ்நாடு மின்வாரிய முதன்மை பொறியாளர் நவசக்தி தலைமை தாங்கினார். துறைமுக வளாக திட்ட மேலாளர் தியோடர்பால் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான துறைமுக வளாக பணியாளர்கள், ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் திருச்செந்தூர் டாக்டர் சசிகலா, மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவஅலுவலர் அனிபிரிமின், மற்றும் மின்சாரவாரிய அலுவலர்கள், துறைமுக வளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story