ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் அமைந்துள்ள தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 129-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. அரியலூர் அரசு கல்லூரி டாக்டர் ரத்த தான முகாமை நடத்தினார். இதில் 120 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இந்த முகாமில் ஆலையின் மூத்த பொது மேலாளர் லஷ்மணன், ஞானமுருகன், ஆலையின் மருத்துவர் வரதராஜன், மக்கள் தொடர்பு அலவலர் கண்ணன் மற்றும் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், ராம்கோ சமூக சேவை கழக உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story