ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வேலூரை அடுத்த அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் கல்லூரியில் நடந்தது. முகாமிற்கு கல்லூரி நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ், கல்லூரி செயலாளரும், பொருளாளருமான ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குனர்கள் ஆர்.பிரசாந்த், டி.கிஷோர், கல்வி இயக்குனர் ஜி.வேதகிரி, முதல்வர் டி.கே.கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் அன்னை மிரா கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், அரப்பாக்கம், பூட்டுத்தாக்கு கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்கள் ரத்த தானத்தின் அவசியத்தையும், அதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இதில், கல்லூரி துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், கல்லூரி துறைத்தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story