ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் நகர் கழக செயலாளர் என்.எம்.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, சிவாஜி, பழனிச்சாமி மாவட்ட கவுன்சிலர்கள் பில்லூர் ராமசாமி, மகேஸ்வரி செல்வராஜ், மாரிமுத்து, பாக்கியலட்சுமி அழகுமலை, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சிவதேவிக்குமார், சுந்தரலிங்கம், ஜாக்குலின், அசோக் குமார், கோட்டையன், கே.பி.ராஜேந்திரன், செந்தில் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
Related Tags :
Next Story