அரியலூரில் ரத்த தான முகாம்


அரியலூரில் ரத்த தான முகாம்
x

அரியலூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

அரியலூர்

உலக ரத்த தான தினத்தையொட்டி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு குறித்த கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் குறித்து காட்சிப்படுத்தபட்டிருந்த படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார். முகாமில் அதிக முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக உலக ரத்த தான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டன.


Next Story
  • chat