ரத்த தானம் செய்த கல்லூரி மாணவர்கள்


ரத்த தானம் செய்த கல்லூரி மாணவர்கள்
x
தினத்தந்தி 15 Jun 2023 3:39 PM IST (Updated: 15 Jun 2023 4:05 PM IST)
t-max-icont-min-icon

ரத்த தானம் செய்த கல்லூரி மாணவர்கள்

திருப்பூர்

திருப்பூர்

உலக ரத்த தான தினத்தையொட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டுநலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நல்லூர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி கலந்துெகாண்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்தார்.

அப்ேபாது அவர் பேசுகையில், தானத்தில் சிறந்தது இரத்த தானம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கருத்துகளை வலியுறுத்தி மாணவ செயலர்கள் ராஜபிரபு, விஜய், காமராஜ், மது கார்த்திக், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முகாமில் 19 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவா்கள் சிந்தியா, முரளி கார்த்திக் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.


Next Story