ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

மதுரை மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைத்து பணியாளர்களும் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.

மதுரை

ரிசர்வ்லைன்,

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பொது சுகாதார துறையின் நூற்றாண்டு நிறைவு விழா மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி மகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் அர்ஜுன்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைத்து பணியாளர்களும் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியை நிர்வாக அலுவலர் ராமநாதன் ஒருங்கிணைத்தார்.


Next Story