ரத்ததான முகாம்
வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.
நீலகிரி
வெலிங்டன்,
குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி., வெலிங்டன் ஸ்டேஷன் தலைமையகம், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், "ரத்த தானம் செய்யுங்கள், ஒரு உயிரை காப்பாற்றுங்கள்" என்ற கருப்பொருளுடன் ரத்ததான முகாம் ராணுவ ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. முகாமில் ரத்தம் சேகரிப்பு மற்றும் அவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தினர் செய்திருந்தனர். முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் ஊட்டி, குன்னூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் ரத்தம் தேவைப்படும் என்பதற்காக 400 பேரிடம் தகவல்கள் வாங்கி பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ராணுவம், என்.சி.சி. மற்றும் குடிமை தற்காப்பு துறையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story