சிவகங்கையில் ரத்ததான முகாம்
சிவகங்கையில் ரத்ததான முகாம் நடைபெற்றது
சிவகங்கை,
சிவகங்கையை ஆண்ட ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கையில் உள்ள அவரது அரண்மனையில் சிவகங்கை சமஸ்தானத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி குழுவினர் ரத்தங்களை சேகரித்தனர். மதுராந்தகி நாச்சியார் முதல் நபராக ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து இந்த முகாமில் பா.ஜ.க. நகர் தலைவர் உதயா, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒக்கூரை சேர்ந்த சுப்ரமணியன் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் உள்பட தேவஸ்தான ஊழியர்கள், மன்னர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை மதுராந்தகி நாச்சியார் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான ஊழியர்கள் செய்திருந்தனர்.