ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

ஆம்பூர் அருகே ரத்ததான முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூைர அடுத்த பெரியவரியம் பகுதியில் உள்ள தனியார் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு வைத்தார்.

அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் தாரணீஸ்வரி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், மருத்துவர் ஷர்மிளா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story