பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்


பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
x
தினத்தந்தி 10 May 2023 4:45 AM IST (Updated: 10 May 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் காலை முதல் மதியம் வரை கோடை வெயில் அடிப்பதோடு, மாலையில் கனமழையும் பெய்து வருகிறது. கோடை விடுமுறையையொட்டி குளிர்ந்த காலநிலை நிலவும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்களை வரவேற்கும் வகையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கொன்றை மரங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதால், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல் வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் வனப்பகுதியை ஒட்டி காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.


Next Story