பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்கள்


பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்கள்
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:01 PM GMT)

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூக்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

திண்டுக்கல்


கொடைக்கானல் நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் கோடை விழா மலர் கண்காட்சியுடன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு வகையான பூச்செடிகள் லட்சக்கணக்கில் பூங்கா வளாகத்தில் நடவு செய்யப்பட்டன. இவை தற்போது பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொடைக்கானலில் ரம்யமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பூங்காவில் பூத்துள்ள பூக்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவில் உள்ள பூக்களின் பெயர்கள், அவற்றின் தாவரவியல் பெயர், தன்மை போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கிய கியூ.ஆர். கோடு அச்சிடப்பட்ட பதாகைகள் பூங்கா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தங்களின் செல்போன் மூலம் அந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து பூக்கள் குறித்த விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

Next Story