பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலைமறியல்


பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலைமறியல்
x
தினத்தந்தி 29 July 2023 1:00 AM IST (Updated: 29 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி 4 ரோட்டில் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் தலைமையில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும், விளைநிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. பாரிமோகன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சேட்டு, மாவட்ட கவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் வெங்கடேசன், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மதியழகன், சிவக்குமார், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேடியப்பன், பச்சமுத்து, முனுசாமி, சின்னத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ராஜா, அன்புமணி படை மாவட்ட செயலாளர் கார்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 144 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டப ஒன்றில் வைக்கப்பட்டிருந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி

இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் நகர செயலாளர் தங்கராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட துணை செயலாளர் பன்னீர் செல்வம், பசுமை தாயக மாவட்ட தலைவர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்தடாக 22 பேரை போலீசார் கைது செய்தனர். பொம்மிடியில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பென்னாகரம்

பென்னாகரம் தற்காலிக பஸ் நிலையம் அருகில் நடந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, தெற்கு ஒன்றிய தலைவர் அருள், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் ஜீவா, நகர தலைவர் சந்தோஷ், ஊடக பேரவை மாவட்ட இணை செயலாளர் அன்பு உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் தர்மபுரி -சேலம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலளார்கள் துரை, சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, மாவட்ட தலைவி பெரியம்மா நாயுடு, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ராஜவேல், ஒன்றிய தலைவர் ஏழுகுண்டு, மாதையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரகாஷ், சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்

கடத்தூரில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் இமயவர்மன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் கலைமணி, சின்ராஜ், செல்வம், நகர தலைவர் முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கம்பைநல்லூர், இருமத்தூர், திப்பம்பட்டி ஆகிய இடங்களிலும் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம்- மாரண்டஅள்ளி

காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பன்னீர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் பா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் அசோக் குமார், நகர தலைவர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், குமரன் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் நந்தி சிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்திய 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாரண்டஅள்ளியில் நான்கு ரோடு பகுதியில் நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கண்ணன், நகர தலைவர் முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, ஒன்றிய தலைவர் மகாதேவன், முருகேசன், முன்னாள் நகர செயலாளர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது 24 பெண்கள் உட்பட மொத்தம் 667 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story