நெய்க்காரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காட்டுப்பன்றி பலி


நெய்க்காரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காட்டுப்பன்றி பலி
x

நெய்க்காரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி காட்டுப்பன்றி பலியானது.

திண்டுக்கல்

நெய்க்காரப்பட்டி அருகே உள்ள பெரியம்மாபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர், மோட்டார் சைக்கிளில் நெய்க்காரப்பட்டியில் இருந்து பெரியம்மாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாய்க்கால் பாலம் பகுதியில் திடீரென்று சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி வந்தது. அதன் மீது துரைப்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் காயம் அடைந்தார். காட்டுப்பன்றி சம்பவ இடத்திலேயே பலியானது.

காயம் அடைந்த துரைப்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுப்பன்றியின் உடலை கைப்பற்றினர். பின்னர் அதன் உடல், வனப் பகுதியிலேயே புதைக்கப்பட்டது.Next Story