போளூரில் ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்
போளூரில் ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
போளூர்
போளூரில் ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
போளூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓவியர் சங்கம் சார்பில் 6-வது வட்டக்கிளை பேரவை கூட்டம் தனியார் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. வட்ட தலைவர் அபில்லாகான் தலைமை வகித்தார். இணைச்செயலாளர்கள் அல்போன்ஸ், முகமது கவுஸ், அருணாச்சலம், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டத் துணைத் தலைவர் அழகிரி வரவேற்றார். இதில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
போளூரான் கால்வாயில் செய்யாற்றின் குறுக்கே உள்ள தடுப்புச் சுவர் பழதடைந்துள்ளது தடுப்புச் சுவர் மற்றும் போளூரான் கால்வாய் சீர் செய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
4 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் வட்டத் துணைத் தலைவர் பாலு நன்றி கூறினார்.
=======