கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு போட்டி


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு போட்டி
x

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நட்சத்திர ஏரியில் படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நட்சத்திர ஏரியில் படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோடை விழா

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கடந்த 24-ந்தேதி கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி கடந்த 29-ந்தேதியுடன் முடிவடைந்தது. கோடை விழா நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சுற்றுலா துறை சார்பில் இன்று படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் சுற்றுலா பயணிகளுக்கு பெடல் படகு போட்டியும், படகு ஓட்டுபவர்களுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. இந்த படகு போட்டிகளில் மொத்தம் 60 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

படகு போட்டி

தலில் இரட்டையர் பெடல் படகு போட்டி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறையை சேர்ந்த ஜீவிகா-ரமேஷ் ஆகியோர் முதலிடத்தையும், திருவாரூரை சேர்ந்த செல்வி-உதயா ஆகியோர் 2-ம் இடத்தையும், திருச்சியை சேர்ந்த புவனேஸ்வரி-சந்தோஷ்குமார் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

4 பேர் கொண்ட குழு பெடல் படகு போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த ரித்திக், உதயா, சாந்தம்மாள், செல்வி குழுவினர் முதல் இடத்தையும், தென்காசியை சேர்ந்த அய்யன்கண்ணு, அபி, சஞ்சீவ்ராவ், மணிகண்டன் குழுவினர் 2-ம் இடத்தையும், மதுரையை சேர்ந்த முத்துக்குமார், முத்துராமன், யுவராஜ், சுவாதி குழுவினர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பரிசுகள்

பின்னர் படகு ஓட்டுபவர்களுக்கான துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இதில், வனபாண்டி முதல் இடத்தையும், தாவூத் இப்ராகிம் 2-ம் இடத்தையும், பெலிக்ஸ் ராஜ்குமார் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி, படகு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் அன்பரசன், உதவி சுற்றுலா அலுவலர் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story