பாய்மர படகு போட்டி


பாய்மர படகு போட்டி
x

பாய்மர படகு போட்டி நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே உள்ள சிங்காரவேலர் நகர் லாஞ்சியடியில் தமிழ்நாடு பட்டங்கட்டிகடையர் பேரவையின் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு பட்டங் கட்டி கடையர் பேரவை தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். சிங்காரவேலர் நகர் தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். போட்டியில் ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 34 பாய்மர படகுகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை தொண்டி புதுக்குடி கருப்பையா, 2-வது பரிசை மோர் பண்ணை ஈஸ்வரன், 3-வது பரிசை தொண்டி புதுக்குடி இளஞ்சியம், 4-வது பரிசை முள்ளிமுனை திரிசங்கு, 5-வது பரிசை தொண்டி புதுக்குடி நீலகண்டன், 6-வது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி குணா ஆகியோரது படகுகள் பெற்றன. வெற்றிபெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கடலோர காவல் படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story