ஆழியாறு அணையில் படகு சவாரி சோதனை ஓட்டம்
ஆழியாறு அணையில் படகு சவாரி சோதனை ஓட்டம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆழியாறு அணையில் படகு சவாரி சோதனை ஓட்டம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
படகு சவாரி
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே ஆழியாறு அணை அமைந்து உள்ளது.
இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அணையில் படகு சவாரி நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் படகு சவாரியை தொடங்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் செலவில் படகை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் படகு சவாரி தொடங்குவதற்கு ஆயத்தமாக நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில், பேரூராட்சி தலை வர் ராமகிருஷ்ணன் தலைமையில் செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் படகு சவாரி மேற்கொண்டனர். விரைவில் படகு சவாரி தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு அணையில் பேரூராட்சி மூலம் படகு சவாரி நடத்தப்பட் டது. சிறுவர்களுக்கு ரூ.30, பெரியவர்களுக்கு ரூ.40 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரி நிறுத்தப்பட்டது. படகுகள் அணையின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அவை நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் பழுதடைந்தன. தற்போது அவை படகு பழுது பார்க்கப்பட்டது.
பாதுகாப்பு பயிற்சி
இதையடுத்து அணையில் படகை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப் பட்டு உள்ளது. படகை இயக்குபவர்களுக்கு முதலுதவி அவசர காலத் தில் செயல்படும் திறன் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கு லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டீசல், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக படகு சவாரி கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
---
Image1 File Name : 12401791.jpg
---
Image2 File Name : 12401792.jpg
----
Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI