நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் படகுக்கு தீவைப்பு - மீனவ கிராமத்தில் பதற்றம்...!


நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் படகுக்கு தீவைப்பு - மீனவ கிராமத்தில் பதற்றம்...!
x

நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் இருதரப்பு கிராம மீனவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த 6-ந் தேதி முன்பு இரு கிராமங்களில் சேர்ந்த இரண்டு மீனவர்கள் தாக்கப்பட்டனர். இதனால் இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கீழ் பட்டினசேரி (ஆரியா நாட்டு தெரு) சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகை இன்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி ஒடிவிட்டனர்.

பற்றி எறிந்த தீயில் வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் முழுவதும் எரிந்து நாசாமயின. அதனை தொடர்ந்து துறைமுகத்தில் திரண்ட மீனவ பெண்கள் கதறி அழுது, படகுக்கு தீ வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இருதரப்பு மீனவர்கள் இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து இருந்த படகை மர்ம நபர்கள் கொளுத்திய சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Next Story