கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 2-வது நாளாக தாமதம்


கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 2-வது நாளாக தாமதம்
x

கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 2-வது நாளாக தாமதமாக தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 2-வது நாளாக தாமதமாக தொடங்கப்பட்டது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, படகு சேவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர். தொடர்ந்து 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு சேவை தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story