பொக்லைன் எந்திரம் எரிப்பு


பொக்லைன் எந்திரம் எரிப்பு
x

முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில், பொக்லைன் எந்திரத்தை எரிந்த நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள ஆவிச்சிப்பட்டியை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 39). நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர். இவருக்கும், பன்னியாமலையை சேர்ந்த விவசாயி ராஜா. (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ராஜா, சிவசங்கரனை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவருக்கு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து சிவசங்கரனின் உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ராஜாவுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை தீ வைத்து கொளுத்தினர். இதுதொடர்பாக நத்தம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்தனர். இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய சாணார்பட்டியை சேர்ந்த அங்குராஜ் (37), உலுப்பகுடி குட்டூரை சேர்ந்த தினகரன் (37), பள்ளபட்டியை சேர்ந்த பூசாரிபாண்டியன் (31), நத்தம் நேரு நகரை சேர்ந்த கோபிநாத் (34) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

-----


Next Story