போடி-தேனி அகல ரெயில் பாதை பணி: சிக்னல் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு


போடி-தேனி அகல ரெயில் பாதை பணி:  சிக்னல் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

போடி-தேனி அகல் ெ்ரயில் பாதை பணியில் சிக்னல் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

போடியில் இருந்து மதுரை வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தேனி-மதுரை வரை பணிகள் முடிந்து தினமும் ரெயில் இயக்கப்படுகிறது. போடி முதல் தேனி வரை 16 கி.மீ. தூரம் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது சிக்னல் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

போடி முதல் தேனி வரை 3 இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இயக்கம் குறித்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. தென்னக ரெயில்வே முதன்மை செயற்பொறியாளர் இளம்பூரணன், துணை செயற்பொறியாளர் சூரியமூர்த்தி உள்ளிட்ட ரெயில்வே பொறியாளர்கள் ரெயில் பாதை மற்றும் சிக்னல் இயக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.இதைத்தொடர்ந்து டிராக் பைண்டிங் எந்திரம் கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து பணிகளும் 15 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தபின் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story