போடி-தேனி அகல ரெயில் பாதை பணி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்


போடி-தேனி அகல ரெயில் பாதை பணி:  ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடி-தேனி அகல ரெயில் பாதை பணியின்போது ஆக்கிமிப்புகள் அகற்றப்பட்டன

தேனி

போடி-மதுரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை-தேனி இடையே பணிகள் முடிவடைந்து தினந்தோறும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி தேனி இடையே அகல ரெயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரெயில் பாதை அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டது. இதில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினர்.


Next Story