மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு; யார் அவர்? போலீசார் விசாரணை


மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு; யார் அவர்? போலீசார் விசாரணை
x

மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிக்கப்பட்டிருந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த படாளம் போலீ்ஸ் எல்லைக்குட்பட்ட பழையனூர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உடலை கோணிப்பையில் கட்டி பாதி எரித்த நிலையில் பிணம் கிடந்தது. ஆணா? பெண்ணா என்று தெரியாத நிலையில் காணப்பட்டது. பின்னர் போலீசார் இறந்து கிடந்தது ஆண், 35 வயது இருக்கும் என்பதை உறுதி செய்தனர்.

வாலிபரை கொன்று உடலை காய்ந்து போன பனங்காய்கள் மீது வைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story