வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

திசையன்விளையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் முத்தையா (வயது 19), கடந்த மாதம் 23-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுரேஷ், மதியழகன், பிரகாஷ் ஆகிய 3 பேரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், நீதிபதி விசாரணை நடத்த வேண்டும், முத்தையாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் முத்தையாவின் உடலை உறவினர்கள் பெற்று, இறுதிச்சடங்கு செய்வதற்கு அப்புவிளைக்கு கொண்டு சென்றனர்.


Next Story