கள்ளக்குறிச்சியில் கிணற்றில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சியில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புற விவசாய கிணற்றில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வாலிபரின் உடலை கைப்பற்றி யார் அவர்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி அன்னை இந்திரா நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஹரிகரன் (வயது 21) என்பதும், போதைக்கு அடிமையான இவர் கடந்த 12-ந்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஹரிகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து செய்து ஹரிகரன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.