கிணற்றில் வாலிபர் பிணம்


கிணற்றில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

சோமநாதபுரம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 29). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் மீனாளிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் ஏதுமில்லை என்று கூறியதால் கோபித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு செல்வராஜ் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் அமராவதிபுதூர் கைகாட்டி அருகே கிணற்றில் வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தது செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story