ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்


ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
x

நெல்லையில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லையில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணமாக கிடந்த வாலிபர்

நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நெல்லை சந்திப்பு போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாத்துரை, நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தலையில் வெட்டுக்காயம்

இறந்த வாலிபரின் தலையில் மட்டும் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. வேறு காயங்கள் இல்லை. எனவே அவரை வேறு எங்கேனும் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு, உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story