கழிவறையில் பெண் பிணம்
விருத்தாசலத்தில் கழிவறையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
கடலூர்
கம்மாபுரம்,
விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை ராமன் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கழிவறையில் லட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story