கொதிகலன் வெடித்து வாலிபர் காயம்


கொதிகலன் வெடித்து வாலிபர் காயம்
x
வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுக்கா கீழ்ஆலத்தூர் அடுத்த நாகல் அப்பாத்திப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் கணேசன் (வயது 24). கீழ்ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். இவர் கொதிகலன் பிரிவில் கடந்த 28-ந்தேதி வேலைசெய்தபோது கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் முகம், இரண்டு கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கருகியது.

உடனடியாக அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கணேசனின் தந்தை தங்கவேல் கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story