திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை


திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை
x

திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 6 மாதத்திற்கு ஒருமுறை விமான நிலையத்தில் தீதடுப்பு ஒத்திகை மற்றும் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில் உள்ள பாதுகாப்பு படையினர், ஆய்வாளர்கள், உயர் அதிகாரிகள், மோப்ப நாய் பிரிவை சேர்ந்தவர்கள், தீயணைப்புத் துறையினர் என பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். இதனால் திருச்சி விமான நிலைய வளாகத்தில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில், திடீரென வெகுண்டு இருப்பது கண்டறியப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story