ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை


ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
x
தினத்தந்தி 28 Nov 2022 12:30 AM IST (Updated: 28 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். அப்போது ரெயில் தண்டவாள பகுதி, நடைமேடை ஆகியவற்றில் மோப்பநாய் வெற்றி மூலம் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் ரெயில்களில் வரும் பயணிகள் வெடி பொருட்கள் ஏதும் கொண்டு வருகின்றனரா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அவர்களின் உடைமைகளையும் போலீசார் சோதனையிட்டனர். மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story