பொம்மிடியில் வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


பொம்மிடியில் வெற்றிலை விலை உயர்வு  விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:14+05:30)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் வெற்றிலைகள் பொம்மிடியில் உள்ள வியாழக்கிழமை வாரசந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரமாக வெற்றிலை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 128 கட்டுகள் கொண்ட 1 மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று ரூ.25 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை ஆனதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story