பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்


பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
x

பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுடனான மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொய்யாமொழி, பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட சீருடைகள் செப்டம்பர் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story