சேலம் அழகாபுரம் பகுதியில் புத்தக கண்காட்சி..!


சேலம் அழகாபுரம் பகுதியில் புத்தக கண்காட்சி..!
x
தினத்தந்தி 21 July 2023 8:42 PM GMT (Updated: 23 July 2023 10:20 AM GMT)

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் 'சேலம் புக்பேர் 2023' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சேலம்

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் 'சேலம் புக்பேர் 2023' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மருத்துவம், பொறியியல், கலை, கதை, அறிவியல், கணிப்பொறி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியை நேற்று ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

சிலர் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச்சென்றனர். இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

கண்காட்சியில் 'தினத்தந்தி' பதிப்பக புத்தகங்களான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், தமிழ் சினிமா வரலாறு, உலகநாயகன் கமல்ஹாசன், இலக்கியத்தில் இன்பரசம், பழகி பார்ப்போம் வாருங்கள், அதிகாலை இருட்டு, திரை உலக அதிசயங்கள், நானும், சினிமாவும், அறிவோம் இஸ்லாம் உள்ளிட்ட புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.


Next Story