புத்தக கண்காட்சி


புத்தக கண்காட்சி
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் புத்தக கண்காட்சி 10-ந் தேதி நிறைவடைகிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகண்ணன் மஹால் திருமண மண்டபத்தில் சரஸ்வதி புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரபல பதிப்பாளர்களின் புத்தகங்கள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தினத்தந்தி சார்பில் திரை உலக அதிசயங்கள், சிறகை விரிக்கும் மங்கள்யான், சீரடி சாய்பாபா, வரலாற்று சுவடுகள், ராம காவியம், உஷாரய்யா உஷாரு, மருத்துவப் பூங்கா, அதிகாலை இருட்டு, ,நம்ப முடியாத உண்மைகள், இளமையில் வெல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் திருக்குறள், வேள்பாரி, மகாபாரதம் போன்ற தமிழ் காவியங்கள், கவிஞர் பாரதிதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன், இறையன்பு ஐ.ஏ.எஸ் உள்பட பல்வேறு அறிஞர்கள் எழுதிய நூல்கள், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், சட்டமேதை அம்பேத்கர், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள், வரலாற்று சார்ந்த புத்தகங்கள், நன்னெறிக்கதைகள், பொது அறிவு, இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகம், தகவல் அறியும் உரிமை சட்டம், டி.என்.பி.எஸ்.சி புத்தகங்கள், ஆறாம் திணை, ஏழாம் சுவை, இயற்கை உணவின் அதிசயம், குழந்தைகளுக்கான புத்தகங்கள், நாவல்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள புத்தகங்கள் 1 லட்சத்திற்கு மேல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புத்தக கண்காட்சி உரிமையாளர் சேத்தியாத்தோப்பை சேர்ந்த ரவி கூறுகையில், இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம். அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை உண்டு. அனைத்து வகையான புத்தகங்களும் 10 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படும். இந்த புத்தக கண்காட்சி வருகிற 10-ந் தேதி வரை மட்டுமே நடக்கிறது என்றார்.


Next Story