மன்னார்குடியில் புத்தக திருவிழா


மன்னார்குடியில் புத்தக திருவிழா
x

மன்னார்குடியில், புத்தக திருவிழாவை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மிட் டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 2-வது ஆண்டு புத்தக திருவிழா மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதற்கு, டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், முன்னாள் தலைமை ஆசிரியர் சேதுராமன், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ரெங்கையன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் சேதுராமன் வரவேற்றார்.

மாநில திட்டக்குழு துணைத்தலைவர்

விழாவில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களை பார்வையிட்டார். இதில் நகரசபை துணைத் தலைவர் கைலாசம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெயக்குமார், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஏசுதாஸ், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பொன்முடி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் இயக்க நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார். இந்த புத்தக திருவிழாவில் 45 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக புத்தக திருவிழா தொடக்க விழாவையொட்டி மன்னார்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் தொடங்கி வைத்தார். ஊர்வலம் கடைத்ெதரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு விழா நடைபெறும் இடத்தை வந்தடைந்தது. இந்த புத்தக திருவிழா வருகிறது 28-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் அனைத்து நேரங்களிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். புத்தக திருவிழாவையொட்டி தினமும் மாலை அரங்கத்தின் வாயிலில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பிரபல பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் உரையாற்றுகின்றனர்.Next Story