நாகையில் புத்தக திருவிழா
நாகையில் புத்தக திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது.
புத்தகம் வாசிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம்(ஜூலை) 4-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். இதில் தலை சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 100-க்்மேற்பட்ட தலைசிறந்த புத்தக பதிப்பாளர்கள் அரங்குகளை அமைக்க உள்ளனர். புத்தகம் திருவிழா தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மாலையில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர்கள், இலக்கிய உரைகள் நடைபெறும். புத்தகத்திருவிழாவினை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது. மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.