புத்தகம், இசை வெளியீட்டு விழா


புத்தகம், இசை வெளியீட்டு விழா
x
தினத்தந்தி 28 Jun 2023 12:07 AM IST (Updated: 28 Jun 2023 2:44 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி பாலா பீடத்தில் புத்தகம், இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில், நேற்று நெமிலி பாபாஜி பாலாவின் 56-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு புத்தகம் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் காணிக்கை, பாலா காட்டும் வள்ளுவம், அன்னை பாலா அருட்துணை ஆயிரம், அன்னை பாலா அருள் மகிழ்ச்சி ஆயிரம் என்ற நான்கு புத்தகங்களை பாபாஜி பாலா வெளியிட, சென்னை சூர்யா மருத்துவமனை மருத்துவர் ஜெயராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பாலா பீட ஆஸ்தான பாடகர் பாலரத்ன மது பாடிய உந்தன் பீடம் சொர்க்கம் என்ற இசை தட்டின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஆன்மிக குடும்பங்கள் மற்றும் பாலா பீட ஆஸ்தான பாடகி பாலரத்னா சுதா ஆனந்த் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை மோகன் ஜி பாலா, முரளிதரன் செய்திருந்தனர்.


Next Story