நாமக்கல்லுக்கு 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகம் வந்தது

நாமக்கல்:
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. வருகிற கல்வி ஆண்டிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்திற்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று சென்னையில் இருந்து 9-ம் வகுப்புக்கான 13 ஆயிரத்து 908 பாடப்புத்தகங்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. அவை மாவட்ட கல்வி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் நாமக்கல் வரும் என்றும், மே மாதத்தில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






