1,370 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்


1,370 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்
x

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,370 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

ராமநாதபுரம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,370 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

ஆதார் எண்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் வகையிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1370 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

அடையாள அட்டை

இந்த சிறப்பு முகாமின்போது வாக்காளர்கள் தன்னார்வ அடிப்படையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி இணைய வழி அல்லது படிவம் 6பி பூர்த்தி செய்து அளித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

எனவே இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.


Next Story