பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
x

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 36 வார்டுகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபம், சேலம் மெயின் ரோடு, திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவுபடி அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைக்க 19 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதில் 10 பேர் பொதுவானவர்கள். மேலும் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களை சேர்க்க வேண்டும். அனைவரும் கடுமையாக உழைத்து வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஏ.ஆர்.ராஜேந்திரன், கே.எம்.சுப்பிரமணியம், டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன், சோடா வாசு, நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ், நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வார்டு செயலாளர் என்.என்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story