ரூ.8 லட்சத்தில் ஆழ்துளை குடிநீர் தொட்டி

ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை குடிநீர் தொட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தேவகோட்டை நகராட்சி 15-வது வார்டு வைத்திலிங்கம் தெருவில் நகர் மன்ற உறுப்பினர் அனிதா சஞ்சய் முயற்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி திறந்து வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் அனிதா சஞ்சய் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்கவி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தேவகோட்டை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய், மாவட்ட துணை தலைவர்கள் பூமிநாதன், அப்பச்சி சபாபதி, வட்டார நிர்வாகிகள் முத்து மனோகரன், முத்துக்குமார், இலக்கிய அணி மாநில செயலாளர் சாமிநாதன், நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வேலு, வீரமணி, காளீஸ்வரன், செல்வம், சங்கர், அன்பு, மாரியப்பன், சதீஷ், கார்த்தி, பழனிச்சாமி, ம.தி.மு.க. ராமநாதன், கேசவன், ஆசிரியர் நல்லதம்பி, சுவாமிநாதன் கலந்து கொண்டனர்.






