பொள்ளாச்சி அருகே கடன் வாங்கிய கடைக்காரர் தலைமறைவு- வருவாய்த்துறையினர் முன்னிலையில் கடையை திறந்து பொருட்கள் அகற்றம்


பொள்ளாச்சி அருகே கடன் வாங்கிய கடைக்காரர் தலைமறைவு-  வருவாய்த்துறையினர் முன்னிலையில் கடையை திறந்து பொருட்கள் அகற்றம்
x

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி விட்டு கடைக்காரர் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அவர் நடத்தி வந்த மளிகை கடையை வருவாய் துறையினர் முன்னிலையில் திறக்கப்பட்டு பொருட்கள் அகற்றப்பட்டன.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி விட்டு கடைக்காரர் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அவர் நடத்தி வந்த மளிகை கடையை வருவாய் துறையினர் முன்னிலையில் திறக்கப்பட்டு பொருட்கள் அகற்றப்பட்டன.

போலீசில் புகார்

பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தில் திருவாரூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் கடையை பூட்டி விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. கடை உரிமையாளர் வாடகை பணம் கேட்க அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் அந்த பகுதியை சிலர் வந்து அவர் கடன் வாங்கி விட்டு கொடுக்கவில்லை.

செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வந்து கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடையை காலி செய்து தரக் கோரி கோட்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் துறை மூலம் கடையில் அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகும் பதில் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து நேற்று வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கடைக்குள் இருந்த முட்டை, பால், தயிர் போன்ற அழுகிய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அந்த வாலிபர் லட்சக்கணக்கில் பணம் வாங்கி விட்டு கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

தென்சங்கம்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வந்த திருவாரூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 3 மாதமாக கடையை திறக்கவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர் கடைக்குள் உள்ள பொருட்கள் காலாவதியாக காரணத்தினாலும், முட்டை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கொடுத்த புகாரின் பேரில் வருவாய் துறையினர் முன்னிலையில் கடையில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. இதற்கிடையில் சிலர் மளிகை கடை நடத்தி வந்தவர் கடன் வாங்கி விட்டு கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story