வந்தவாசியில் 'போதை வேண்டாமே' விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காவல் துறை சார்பில் 'போதை வேண்டாமே' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் போதையின் தீங்குகளையும், ஒழுக்கத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.
நிகழச்சியில் போதை பயன்பாட்டின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடித்து காட்டப்பட்டது. வழூர் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவரான டாக்டர் ஆனந்தன், போதை பழக்கத்தினால் ஏற்படும் மருத்துவ ரீதியான பிரச்சினைகள் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில், அஷாருதீன், கேசவராஜ் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ராம்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story