சேறும், சகதியுமாக மாறிய போத்தனூர் சாலை
தொடர்மழையால் சேறும், சகதியுமாக போத்தனூர் சாலை மாறியது.
கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் போத்தனூர் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இந்த குழியில் மழைநீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.வதால் சாலை எது? குழி எது என்று வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவை-பொள்ளாச்சி சாலையில் இருந்து போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படா மல் உள்ளது. மேலும் கேபிள்கள், குழாய்கள் பதிப்பதற்காக தோண் டப்பட்ட சாலை சீரமைக்கப்பட வில்லை. தற்போது பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனர்.