விடுமுறை விடப்பட்டும் தாராளமாக விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள்


விடுமுறை விடப்பட்டும் தாராளமாக விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள்
x

விடுமுறை விடப்பட்டும் மது பாட்டில்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நேற்று மயானக்கொள்ளை நடைபெற்றது. மயானக்கொள்ளை நடைபெறும் இடங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை நடைபெற்ற இடங்களில் அமைந்துள்ள 21 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. குடியாத்தம் பகுதியில் ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

இருப்பினும் நேற்று அதிகாலை முதலே குடியாத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகிலேயே மது பாட்டில்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேற்று மதியம் மது பாட்டில்கள் விற்றவர்களை போலீசார் விரட்டி விட்டனர்.


Next Story