பூட்டிக்கிடக்கும் அம்மா உணவகம்


பூட்டிக்கிடக்கும் அம்மா உணவகம்
x

விருதுநகரில் பூட்டி கிடக்கும் அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெறுபவர்களுக்கும், ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கும் இந்த அம்மா உணவகம் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர் தனியார் உணவகங்களில் உணவருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் அரசுஆஸ்பத்திரி வளாகத்தில் வழக்கம்போல் அம்மாஉணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.



Next Story