பள்ளியில் வகுப்பை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
பள்ளியில் வகுப்பை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி
லால்குடி:
லால்குடி அருகே பூவாளூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஒரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் பூவாளூரைச் சேர்ந்த சந்திரசேகர்(60), பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பூவாளூர் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு ஆரவாக வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும். குற்றமற்ற ஆசிரியர் சதீஸ்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட பதாகையை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அனைவரும் வகுப்பறைக்கு சென்றனர்.
Related Tags :
Next Story