மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது


மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:40+05:30)

கோவையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

15 வயது மாணவி

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் உறவினரான 17 சிறுவன் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு சென்றுவந்தார். இந்த நிலையில் சிறுவன், மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பேசி வந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி மாணவியை வெளியூர் அழைத்துச்சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவியை, சிறுவன் கடத்தி சென்று, பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் 2 பேரும் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் மாணவி கர்ப்பம் ஆனார். பின்னர் 5 மாத பரிசோதனைக்காக மாணவியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது 15 வயது மாணவி கர்ப்பமான தகவல் தெரியவந்தது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் கைது

போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, கோவை கிழக்குப்பகுதி போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story